சென்னை 2025: கேரள அரசு, ஆசியாவின்மிகப்பெரிய தொழிலாளர் கூட்டுறவு சங்கமான உரலுங்கல்லேபர் காண்ட்ராக்ட் கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டி(ULCCS) லிமிடெட் மூலம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டஇந்த மிகப்பெரிய மறுவாழ்வு திட்டமான (WayanadRehabilitation Project) வயநாடு மறுவாழ்வு திட்டத்திற்கானஅடிக்கல் நாட்டியதன் மூலம் நம்பிக்கை மற்றும் உறுதியின்ஒரு புதிய அத்தியாயம் நேற்றையதினம் தொடங்கப்பட்டது. 2024 ஜூலை 30-ந் தேதி ஏற்பட்ட மலைச்சரிவு 298 பேருக்கும் மேல் உயிரிழப்பும், ஆயிரக்கணக்கானோர்வீடிழப்பும் ஏற்படுத்திய இந்த பேரழிவால் பாதிக்கப்பட்டகுடும்பங்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை,இந்த லட்சிய முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்பெட்டாவில் 64 ஹெக்டேர் பரப்பளவில்செயல்படுத்தப்படுகிற இந்த திட்டம்பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழு சென்ட் நிலம் மற்றும் நவீனவசதிகளுடன் கூடிய 1,000 சதுர அடி பரப்பளவுள்ள 2BHK வீடு நகரியத்தில் வழங்குகின்றது. நேற்று கல்பெட்டா பைபாஸ் அருகே உள்ள எல்ஸ்டன்எஸ்டேட்டில் நடைபெற்ற ஒரு மங்களகரமான விழாவில்கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களால் அடிக்கல்நாட்டப்பட்டது. வருவாய் மற்றும் வீட்டு வசதி துறைஅமைச்சர் K. ராஜன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள்இந்த விழாவில் கலந்து கொண்டனர். ஒரு சுற்றுச்சூழல் நட்புமற்றும் தன்னிறைவு கொண்ட சமூகமாக வடிவமைக்கப்பட்டஇந்த டவுன்ஷிப், இடம்பெயர்ந்த குடும்பங்களைமேம்படுத்துகின்ற வகையில் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம்மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றைஒருங்கிணைக்கிறது. காலநிலை மீள்தன்மை வளர்ச்சி மற்றும் நீண்டகால நிலைத்தன்மை ஆகியவை குறித்த கேரளஅரசின் உறுதிப்பாட்டையும் இது முக்கியப்படுத்துகிறது. இந்த நிகழ்வில் உரையாற்றிய கேரள முதல்வர் பினராயிவிஜயன் கூறுகையில், “இந்த வயநாடு மறுவாழ்வு திட்டம்கேரளாவின் விடாமுயற்சி மற்றும் ஒற்றுமைக்கு ஒருசான்றாக நிற்கிறது. சாத்தியமற்றது என்று தோன்றியசூழ்நிலையில், எந்தப் பேரிடரும் நம்மை முறியடிக்கமுடியாது என்பதை நிரூபிக்கின்ற வகையில் நம் மக்கள்அசைக்க முடியாத ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தனர். நம்குழந்தைகளின் தன்னலமற்ற பணி, நமது நிறுவனங்களின்அர்ப்பணிப்பு மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சி, இந்தஇடர்பாட்டை நம்பிக்கையாக மாற்றியுள்ளது. நாம் ஒன்றாகநிற்கும்போது, எதுவும் நமக்கு அப்பாற்பட்டது இல்லைஎன்பதற்கு இந்த பணி ஒரு நினைவூட்டலாகஇருக்கிறது.”என்று கூறினார். மறுவாழ்வு முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதலமைச்சர்விஜயன் மக்கள் மறுகட்டமைப்பு செயல்முறைக்குபங்களிப்பதற்கு மக்களுக்கு உதவுகின்றwayanadtownship.kerala.gov.in என்ற போர்ட்டலைத்தொடங்கினார். ₹20 கோடி நிதியுதவியை ஒதுக்கி 100 வீடுகள் கட்ட உதவிய கர்நாடக அரசின் நிதி ஆதரவையும்இதனுடன், தேசிய சேவா திட்டம் (NSS) ₹10 கோடியும், DYFI 100 வீடுகள் கட்டுவதற்காக ₹20 கோடியும்நன்கொடையாக வழங்கியுள்ளதையும் அவர் அறிவித்தார்.” உரலுங்கல் லேபர் காண்ட்ராக்ட் கோ–ஆப்பரேட்டிவ்சொசைட்டி (ULCCS) லிமிடெட் இன் தலைவர் ரமேஷன்பாலேரி இந்த உறுதிப்பாட்டைக் குறித்து கூறுகையில், “பேரிடர் ஏற்பட்ட முதல் நிமிடம் முதல் வயநாட்டின்துயரத்தில் மூழ்கிய மக்களுடன் நாங்கள் உறுதியாகநின்றோம். எங்கள் அருகிலுள்ள பணியிடத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் மீட்புப் பணிகளுக்காக பேரிடர் நடந்தஇடத்திற்கு எங்கள் குழு விரைந்தது. அந்த முக்கியமானதருணங்களில், நாங்கள் கட்டடம் கட்டுவோராக அல்ல – முதல் அவசரகால தன்னார்வலர்களாக, அவர்களின்தேவைப்படும் நேரத்தில் சமூகத்துடன் தோளோடு தோள்சேர்த்து நின்றோம். இந்த மறுவாழ்வுத் திட்டம் வீடுகளைமீண்டும் கட்டுவது மட்டுமல்ல, நம்பிக்கையையும், கண்ணியத்தையும், ஒரு சொந்தம் கொள்ளும் உணர்வையும்மீட்டெடுப்பதற்கான அந்த உறுதிப்பாட்டின் ஒரு நீட்டிப்பாகஇருக்கிறது....