சென்னை, ஜனவரி 2026: இந்தக் குடியரசு தினத்தில், கோத்ரேஜ் என்டெர்பிரைசஸ் குழுமத்தின் அப்லையன்ஸஸ் பிசினஸ், ‘டெஸ்டேட் ஃபார் ஹேண்ட்லூம்ஸ்’ முன்முயற்சியின் மூலம் இந்தியாவின் காலத்தால் அழியாத கைத்தறி மரபை புத்துயிர் பெறச் செய்யும் ஒரு அர்த்தமுள்ள முயற்சியை எடுத்துள்ளது. கைத்தறி நெசவு துணிகளுக்கு
ஏற்ற ஃபிரண்ட் லோட் வாஷிங் மெஷின் தொழில்நுட்பத்துடன், இந்த பிராண்ட் கைத்தறி துணி பராமரிப்பை சிரமமின்றி செய்து, கைத்தறி துணிகளை கொண்டாடவும், பெருமையுடன் அடிக்கடி அணியவும் நமது சக இந்தியர்களை ஊக்குவிக்கின்றது.
ஒவ்வொரு இந்திய மாநிலமும், கேரளாவின் காசவு, கர்நாடகாவின் மைசூர் பட்டு, தெலுங்கானாவின் போச்சம்பள்ளி, இக்காட், மகாராஷ்டிராவின் பைத்தாணி, லக்னோவின் சிகன்காரி, குஜராத் மற்றும் ராஜஸ்தானின் பந்தனி, அசாமின் முகா பட்டு மற்றும் பல என அதற்கு சொந்தமான கைத்தறித் துணிகளைக் கொண்டுள்ளது, அவற்றில் சில யுனெஸ்கோவாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்த கையால் நெய்யப்பட்ட பாரம்பரியங்கள், இந்தியாவின் செழுமையான மற்றும் பன்முக கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த ஒரு அங்கமாக இருக்கின்றன. இருந்தபோதிலும், கைத்தறித்துறை புதுப்பித்தலின் அவசரத் தேவையில் உள்ளது, மேலும் நுகர்வோர் கைத்தறிப் பொருட்களை இன்னும் அதிகமாக ஆதரிக்க வேண்டும். இருப்பினும், கைத்தறி ஆடைகள் பெரும்பாலும் மக்களால் அதிக பராமரிப்பு தேவைப்படுபவையாக கருதப்படுகின்றன. துணிகளுக்கு சேதம் ஏற்படும் அச்சத்தின் காரணமாக பெரும்பாலான மக்கள் கைகளால் துவைப்பது அல்லது உலர் சலவை மீது மட்டுமே சார்ந்துள்ளனர், இதன் விளைவாக, அவர்கள் கைத்தறித் துணிகளை அணிவதும் வாங்குவதும் குறைவாகவே உள்ளது.
இந்த கவலைகளைத் தீர்க்கவும் அன்றாட கைத்தறி துணி பராமரிப்பை எளிதாக்கவும், கோத்ரெஜ் நிறுவனம் அதன் AI மூலம் இயக்கப்பட்ட அதிநவீன ஃபிரண்ட் லோட் வாஷிங் மெஷின்களை இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் பனாரஸ் பட்டு மற்றும் படோலா பட்டு முதல் போச்சம்பல்லி இகத் மற்றும் ஜம்தானி உள்ளிட்ட இருபத்தைந்து கைத்தறி துணிகளில் வெற்றிகரமாக சோதித்துள்ளது. இந்த இயந்திரத்தின் மென்மையான வாஷ் ப்ரோக்ராம், இருபத்தைந்து வகையான கைத்தறித் துணிகளை அதிகபட்ச பராமரிப்புடன் இருபத்தைந்து முறை வரை* துவைப்பதற்கு ஏற்றதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. துணியின் கட்டமைப்பு இணைவை, ஏற்றுக்கொள்ளக்கூடிய தேய்மான நிலைகளுக்காக மதிப்பிடுவதற்கு இந்த துணிகள் ஒரு குழுவால் கண்களால் பரிசோதிக்கப்பட்டது
மட்டுமின்றி, 40 மடங்கு உருப்பெருக்கம் கொண்ட நுண்ணோக்கியின் கீழும் பரிசோதிக்கப்படுகின்றன.
இந்த முயற்சியைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், கோத்ரேஜ் என்டர்பிரைசஸ் குழுமத்தின் அப்ளையன்ஸ் டிவிஷன் இன் தலைவர் கமல் நந்தி கூறுகையில், “தொழில்நுட்பம் நமது பாரம்பரியங்களுடன் இணையும்போதுதான், முக்கியமானவற்றைப் பாதுகாத்து, தலைமுறைகளுக்கான முன்னேற்றத்திற்கு நாம் முன்னோடியாகத் திகழ முடியும். இந்தியக் கைத்தறிகளின் புத்துயிர்ப்புக்கு நமது கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன, மேலும் ‘இந்தியாவுக்காக வடிவமைக்கப்பட்ட’ எங்கள் வாஷிங் மெஷின்கள் மூலம், இந்தியர்களை அவர்களின் அழகான கைத்தறி ஆடைகளை அதிக நம்பிக்கையுடனும் பெருமையுடனும் அடிக்கடி அணிந்து அதை வெளிப்படுத்த நாங்கள் ஊக்குவிக்கிறோம்.”என்று கூறினார்.
மேலும், கோத்ரேஜ் என்டர்பிரைசஸ் குழுமத்தின் அப்ளையன்சஸ் பிசினஸ் சந்தைப்படுத்தல் தலைவர் ஸ்வாதி ரத்தி கூறுகையில், “கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் நிறுவனத்தில், உண்மையிலேயே இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்காக நாங்கள் எப்போதும் உறுதிப்பாட்டுடன் உள்ளோம். இந்த ‘கைத்தறி துணிகளுக்காக சோதிக்கப்பட்டது’ என்ற முன்முயற்சியின் மூலம், இந்திய நுகர்வோர் தங்கள் கோத்ரெஜ் வாஷிங் மெஷின்கள் மூலம், வீட்டிலேயே தங்கள் கைத்தறி துணிகளை பராமரிப்பதை நாங்கள் எளிதாக்குகிறோம்.”என்றார்.
மேலும் விவரங்களுக்கு எங்கள் வலைத்தள லேண்டிங் பக்கத்தைப் பார்வையிடவும்-
